Suriya40

சூர்யா 40 திரைப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிகர் வினய் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Suriya40 Movie Villian Update : திரைப்பட துறையில் முன்னணி நடிகரான சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்திருந்த சூரைப்போற்று திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இந்த படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றது. இதில் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், கதாசிரியர் போன்ற பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. ஆஸ்கார் பட்டியலில் தங்கள் படம் தேர்வாகியுள்ளதே என்று படக்குழுவினர் உற்சாகமாகி உள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள படத்தில் வாக்குகளின் அடிப்படையில் இறுதி பட்டியல்களை அறிவிப்பார்கள். சூரரைப்போற்று படத்தின் ஆஸ்கர் விருதுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

சூரரைப்போற்று வெற்றியை அடுத்து கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சூர்யா பாண்டிய ராஜ் இயக்கத்தில் “சூர்யா 40” என்ற படத்தில் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் வெளியாக உள்ளது. இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமான வினய் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வராத நிலையில் மிஷ்கினின் துப்பறிவாளன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுக்களை பெற்ற நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு வில்லனாகவும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனே தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வில்லனாக அவதாரம் எடுத்த வினய் அடுத்ததாக சூர்யாவுடன் ‘சூர்யா 40’ என்ற பெயரிடப்படாத படத்தில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா, வினய் கூட்டணியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.