Suriya Wishes to Karnan Team

நடிகர் சூர்யா கர்ணன் படம் பார்த்து இயக்குனருக்கு போன் போட்டு வாழ்த்தியுள்ளார்.

Suriya Wishes to Karnan Team : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் கர்ணன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தினை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். படத்தினை பார்த்த விஜய் சேதுபதி, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் படத்தினை பாராட்டி பதிவு செய்திருந்தனர்.

இவர்களை தொடர்ந்து நடிகர் சூர்யா கர்ணன் படத்தினை பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு போன் போட்டு வாழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து தனக்கும் ஒரு கதை உருவாக்குமாறு அவரிடம் கூறி உள்ளதாகவும் இவர்கள் கூட்டணியில் வாடிவாசல் படத்திற்கு முன்னதாகவே உருவாகும் என கூறப்படுகிறது.