Suriya Vs Sivakarthikeyan

சூர்யாவை விட சிவகார்த்திகேயன் வாங்குற சம்பளம் அதிகம், சூர்யாவை விட சிவகார்த்திகேயனுக்கு அதிக மார்க்கெட் என பேசி சூர்யா ரசிகர்களிடம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன்.

Suriya Vs Sivakarthikeyan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. அஜித் விஜய்க்கு அடுத்ததாக மிகப் பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் சூர்யா.

ஆனால் சமீபகாலமாக இவருடைய படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை இறுதியாக வெளியான சூரரைப்போற்று படம் மட்டுமே நல்ல வெற்றியைப் பெற்றது.

12 பாவங்களுக்கு, மன்னிப்பு கிடையாது.!

இதனால் சூர்யாவின் மார்க்கெட் சரிந்து விட்டது. சூர்யாவை காட்டிலும் சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் வாங்குகிறார். அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது என பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் அவரது யூடியூப் பக்கத்தில் பேசிய வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

வலிமை First Look Release தேதி..? இதுதான் Latest தகவல்.!! | Thala Ajith | H Vinoth | Valimai | Viral

இதனால் கடுப்பான சூர்யா ரசிகர்கள் 25 வருட அனுபவமுள்ள சூர்யாவுடன் எப்படி சிவகார்த்திகேயனை ஒப்பிடலாம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள சூர்யா 40, வாடிவாசல் ஆகிய படங்கள் அவருடைய மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.