Suriya Vs Rajini

Suriya Vs Rajini : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.

இதில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்.ஜி.கே படம், மே இறுதியிலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காப்பான் படம் ஆகஸ்ட் இறுதியிலும், சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் சூரரைப் போற்று படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இதுபோக அடுத்ததாக சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யா நடிக்கும் 39-வது படமாகும்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அண்மையில் வெளியிட்டனர். சூர்யாவின் ஆஸ்தான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவாளர் வெற்றி என ஒட்டுமொத்த விஸ்வாசம் படக்குழுவும் இதில் இணைய போவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

மேலும் நயன்தாரா இப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லியிருந்தோம்.
இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறதாம்.

அதே நாளில் ரஜினியின் தர்பாரும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் ரஜினி படம் வெளிவந்தால் அவருடன் எந்த நடிகரும் மோத மாட்டார்கள்.

ஆனால் இந்த ஆண்டு பேட்ட படத்துடன் மோதி விஸ்வாசம் வெற்றி பெற்றதால் அதையே கடைப்பிடிக்க சூர்யாவும் திட்டமிட்டுள்ளாராம். மேலும் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவாவே தன் வசம் இருப்பதால் துணிந்து மோத தயாராகிவிட்டாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.