Suriya Vs BJP : BJP Leaders Blast Suriya's Family - Inside the Attachment | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய சூர்யாவை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையே வம்பிழுத்து வருகின்றனர் பிஜேபியினர்.

Suriya Vs BJP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

இதனால் பிஜேபியின் சூர்யாவுக்கு எதிராக மாறியுள்ளனர். எச் ராஜா முதலில் புதிய கல்வி கொள்கை பற்றிய 40 பக்க வரைவை படித்து விட்டு பேசுங்க.. ஏதோ பேச வேண்டும் என பேசாதீர்கள் என சாடி இருந்தார்.

அவரை தொடர்ந்து சிவகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது காபி, டீ குடிக்காதீங்க என கூறியதை வைத்து எஸ்.வி சேகர் இவரோட புள்ளைங்க டீ, காபி விளம்பரத்துல நடிப்பாங்களாம் என கிண்டலடித்து விமர்சனம் செய்திருந்தார்.

இவர்களை தொடர்ந்து தமிழிசையும் கிராமப்புற மக்களுக்காக உங்க படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா என விமர்சனம் செய்திருந்தார். மேலும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாராயணன் திருப்தியும் சூர்யாவை சீண்டியுள்ளார்.

இவர்களுடைய எதிர்ப்பு சூர்யா படங்களின் ரிலீஸின் போதும் தொடர்ந்தால் அது சூர்யா படத்திற்கு இன்னும் கொஞ்சம் பலனை கொடுக்கும். நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.