Suriya Upcoming Movie Updates
Suriya Upcoming Movie Updates

சூர்யாவின் அடுத்த படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்பது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Suriya Upcoming Movie Updates : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் வெற்றிமாறன் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் வெற்றிமாறன் கொடுத்த வெற்றிகளும் இக்கூட்டணி முதல்முறையாக அமைவது தான்.

நடு இரவில் சென்னையில் நடிகர் ஷாம் கைது? – வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த படங்களை தொடர்ந்துநடிகர் சூர்யா தெலுங்கு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆளவைகுண்டபுரமலோ என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இப்படம் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நிச்சயம் இந்த கூட்டணி அமைய வேண்டும் என சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.