நடிகர் சூர்யா தற்போது நடிக்க தயாராகி இருக்கும் சூர்யா 42 ஷூட்டிங் குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் “சூர்யா 42″என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார்.

அதிரடியாக தொடங்கிய சூர்யா 42 ஷூட்டிங்.. நடிகர் சூர்யா வெளியிட்ட போட்டோ.!

மேலும் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தற்போது இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதிரடியாக தொடங்கிய சூர்யா 42 ஷூட்டிங்.. நடிகர் சூர்யா வெளியிட்ட போட்டோ.!

அதில் அவர் ‘படப்பிடிப்பு தொடங்குவதற்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் தேவை’ எனக் குறிப்பிட்டு இப்படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்களின் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.