Suriya Take Risk
Suriya Take Risk

Suriya Take Risk – செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

MR.லோக்கல் தள்ளிப்போகிறதா? படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

அண்மையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து இப்படத்தின் மற்ற அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படம் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

வினோத்துடன் மோதினாரா அஜித் – நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் நடந்தது என்ன?

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் மட்டும் ஒருநாள் முன்னதாக பிரீமியர் காட்சியுடன் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் முன்னதாக வெளியானால் இணையத்தில் படம் எப்படியும் லீக்காகிவிடும் என்பதால் சூர்யாவின் இந்த முடிவை கண்டு பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.