படப்பிடிப்பின் போது சூர்யாவிற்கு தலையில் காயம்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து சூர்யா 44 என்ற படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
பிறகு சில நாட்கள் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் பதிவு ஒன்றை வெளியிட்டு அதில், அன்பான ரசிகர்களே, சிறு காயம் தான்.தயவு செய்து கவலைப்பட வேண்டாம். சூர்யா அண்ணா உங்கள் அனைவரின் அன்புடனும் பிரார்த்தனையுடனும் நன்றாக இருக்கிறார். என்று பதிவிட்டுள்ளார்.
இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.