கல்லூரி விழாவில் நான் தான் முதல் பிகில் என நடிகர் சூர்யா சுவாரசிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Suriya Speech in College Function : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ரி யூனியன் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் என்ற முறையில் நடிகர் சூர்யா கலந்து கொண்டுள்ளார்.

அரசியல் சதுரங்கம் : போட்டி பாராளுமன்றம் நடத்த ராகுல் திட்டம்.?

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா என்னுடைய கல்லூரி நினைவுகள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய நண்பர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி. கல்லூரியில் படிக்கும்போது எனக்கு பாட தெரியாது. ஆனால் விசில் மூலம் பாட தெரியும்‌. அப்போது நிகழ்ச்சிகளில் என் விசில் சத்தம் தான் அதிகம் கேட்கும். அதனால் என் நண்பர்கள் என்னை பிகில் என அழைத்தார்கள். என்னை அப்படி அழைத்தவர்கள் நிறைய பேர் தற்போது உள்ளார்கள் என சூர்யா பேசியுள்ளார்.

ரூ 100 கோடியை தாண்டிய வலிமை இந்தி வியாபாரம் – வெளியான அதிரடி தகவல்..! | Latest News | Trending | HD