Suriya siva film to commence on August | Suriya 39 | Suriya | Viswasam | Thala Ajith | NGK | Kaappaan | Tamil CInema | Cinema News

Suriya siva film to commence on August :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.

இதில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்.ஜி.கே படம், மே இறுதியிலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காப்பான் படம் ஆகஸ்ட் இறுதியிலும்,

சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் சூரரைப் போற்று படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

இதுபோக அடுத்ததாக சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யா நடிக்கும் 39-வது படமாகும்.

உங்களுக்கு வயசே ஆகாதா? – ராதிகாவின் புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் நெட்டிசன்கள்.!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அண்மையில் வெளியிட்டனர். சூர்யாவின் ஆஸ்தான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவாளர் வெற்றி என ஒட்டுமொத்த விஸ்வாசம் படக்குழுவும் இதில் இணையபோவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாம்.

அதற்குள் காப்பான் மற்றும் சூரரைப் போற்று படங்களின் படப்பிடிப்பை முடித்து விடுவார் மேலும் சிவாவும் அதற்குள் இப்படத்தின் திரைக்கதை பணிகளை முடித்து விடுவார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.