நடிகர் சூர்யா தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் பாபி தியோல்,திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி , யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் ஆக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா ஒரு தனி விமானத்தை வாங்கியுள்ளதாகவும், அதன் விலை 120 கோடி என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் கங்குவா ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்துடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.