Oraigal

🌞 சூரிய ஓரை :
சூரிய ஓரையில் செய்யக்கூடியவை:
சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷயங்கள், மேலதிகாரிகளை சந்தித்தல், தந்தையிடம் சென்று அவருடைய உதவியை நாடலாம். உயில் சாசனங்கள் எழுதலாம். பத்திரம் பதிவு செய்யலாம். சிவ தரிசனம் செய்யலாம்.

🌞 செய்யக்கூடாதவை
புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும், சொந்த வீட்டிலோ வாடகை வீட்டிலோ பால் காய்ச்ச கூடாது. புதுமனை போகக்கூடாது. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது.

🌙 சந்திர ஹோரை:
சந்திர ஹோரை செய்யக்கூடியவை:
புது வியாபாரம் தொடங்கலாம், குறிப்பாக தண்ணீர், பால் அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கியில் கணக்கு தொடங்கலாம். திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல்,
பெண் பார்க்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடலாம். கண் சம்பந்தமாக மருத்துவரை சந்திக்கலாம். கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம்.

🌙 செய்யக்கூடாதவை:
தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும் சொத்து சம்பந்தமாக பேசக்கூடாது. இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here