சமூக வலைத்தளங்களில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்திருந்ததை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

அதேபோல் அப்படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருந்த சூர்யாவின் வெறித்தனமான கதாபாத்திரத்தின் ஆப் ஸ்கிரீன் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்