தல அஜித்துடன் சைக்கிளில் ரைட் சென்றுள்ளார் நடிகர் சூர்யா.

Suriya Ride With Ajith Kumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அஜித்துடன் சைக்கிளில் ரைட் சென்ற சூர்யா.. இணையத்தை கலக்கும் அரிய புகைப்படம்

பொதுவாக அஜித்துடன் நடிக்க வேண்டும் என பெரும்பாலான நடிகர்களுக்கு ஆசை உண்டு. அவ்வளவு ஏன் விஜய் கூட அஜித்துக்கு வில்லனாக மங்காத்தா படத்தில் நடிக்க ஆசைப்பட்டு உள்ளார்.

நடிகர் சூர்யாவும் மேடை நிகழ்ச்சிகளில் அஜித்துடன் இணைந்து நடிக்க நான் தயார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை இந்த இரண்டு கூட்டணியும் அமையவில்லை.

அஜித்துடன் சைக்கிளில் ரைட் சென்ற சூர்யா.. இணையத்தை கலக்கும் அரிய புகைப்படம்

இப்படியான நிலையில் தல அஜித் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் ஒன்றாக சைக்கிளில் ரைட் சென்ற அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.