Suriya Rejected Pa Ranjith Movie
Suriya Rejected Pa Ranjith Movie

கதை கேட்டு விட்டு 6 வருடமாக சூர்யா அமைதி காத்து வந்ததால் பிரபல இயக்குனர் வேறு ஒரு நடிகரை வைத்து அந்த படத்தை இயக்கும் வேலையில் இறங்கி விட்டார்.

Suriya Rejected Pa Ranjith Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அஜித், விஜய் ஆகியோர் வளர்ந்து வந்த காலத்தில் ரஜினிக்கு அடுத்ததாக மாஸ் ஹீரோவாக இருந்து வந்தார்.

ஆனால் கடந்த சில வருடங்களாக நல்ல கதையை தேர்ந்தெடுக்க முடியாமல் தவித்து வருகிறார். தற்போது தான் ஐந்து தரமான இயக்குனர்களை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்து நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதனால் சூர்யாவின் மார்க்கெட் மீண்டும் கிடுகிடுவென உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்ச்சை இயக்குனர் ஒருவரிடம் கதை ஒன்றைக் கேட்டு விட்டு ஆறு வருடமாக யோசித்ததால் வேறொரு நடிகரிடம் அதே கதையை கூறி ஓகே செய்துள்ளார் அந்த இயக்குனர்.

அஜித்தை தொடர்ந்து சூர்யா எடுத்த அதிரடி முடிவு..!

அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பா ரஞ்சித் தான். கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கிய போது இவர் சூர்யாவிற்கு ஒரு கதையை கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவிற்கு அந்த கதை பிடித்திருந்தும் மெட்ராஸ் படம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியதால் அவருடன் இணைய தயக்கம் காட்டினார். ரஞ்சித் சூர்யாவிற்காக ஆறு வருடங்கள் காத்திருந்தார். ஆனால் இதுவரை அவர் ஓகே சொல்லாததால் அதே கதை ஆர்யாவிடம் கூறி ஓகே செய்துள்ளார்.

அந்தத் திரைப்படம் தான் தற்போது ஆர்யா நடிப்பில் சல்பேட்டா பரம்பரை என்ற பாக்ஸிங் படமாக உருவாகி வருகிறது.

இந்த கதை தான் சூர்யாவுக்காக கூறப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.