Suriya Pandiraj Movie Update

சூர்யாவுடன் முதன் முறையாக பிரபல நடிகை ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suriya Pandiraj Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார்.

இதனை தடுப்பதற்காக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் குறித்தும் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா சூர்யாவுடன் ஜோடி சேர இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

சூர்யா, ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பும் ஒன்றாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.