Suriya Next With Lingusamy

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய உள்ளார் நடிகர் சூர்யா.

Suriya Next With Lingusamy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீம்ஜி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா மற்றும் பாலா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

சசிகலா, அதிமுகவை கைப்பற்றவே முடியாது : ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

இந்த நிலையில் தற்போது இவர் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான அஞ்சான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்த நிலையிலும் மீண்டும் இவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பேசப்பட்டு வருகிறது.

Suriya கட்டாயம் Oscar விருதுக்கு தகுதியானவர் – புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்! | Cinema News