Suriya Next With Karthik Thangavel

சூர்யாவின் அடுத்த படத்தில் இணையும் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Suriya Next With Karthik Thangavel : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40 திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அடங்கமறு இயக்குனரான கார்த்திக் தங்கவேல் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.