suriya Next Projects
suriya Next Projects

சூர்யாவின் 40 41 மற்றும் 42-வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Actor Suriya’s Upcoming Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாகத்தான் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

2021-ல் ரெண்டு படம் ரிலீஸ்.. 600 கோடி வசூலுக்கு பிளான் போடும் விஜய் – வெளியான செம மாஸ் தகவல்.!!

தற்போது இது குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சூர்யா மற்றும் வெற்றிமாறன் இனிய உள்ள படம் சூர்யாவின் 40வது திரைப்படம் எனவும் இதன் படப்பிடிப்புகள் அடுத்த வருடத்தில் தொடங்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Seenu Ramasamy Wishes To Suriya

இந்த படத்தை தொடர்ந்து கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது சூர்யாவின் 41வது திரைப்படம்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதுதான் சூர்யாவின் நாற்பத்தி இரண்டாவது திரைப்படம் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த மூன்று திரைப்படங்களில் சூர்யாவிற்கு நிச்சயம் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் சூர்யாவிற்கு இனி எல்லாமே வெற்றி தான் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.