Suriya 39
Suriya 39

Suriya 39 : பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமாகும் எல்லோருக்கும் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிப்பதில்லை.

லட்சிய கனவுகளோடு காலடி எடுத்து வைக்கும் எல்லோரையும் கலைத்தாய் கட்டியணைத்து அரவனைப்பதில்லை.

தோல்விகள், அவமானங்கள் என துயரங்கள் துரத்தியபோதும் விடா முயற்சியுடன் போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள்.

இதற்கு முன்னுதாரணமாய் இருக்கும் சம கால நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.

Suriya 39
Suriya 39

இதில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்.ஜி.கே படம் மே இறுதியிலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காப்பான் படம்,

ஆகஸ்ட் இறுதியிலும் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் சூரரைப் போற்று படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

இதுபோக அடுத்ததாக சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது இதுபோக இன்னொரு இயக்குனரிடமும் சூர்யா கதை கேட்டு வருகிறாராம்.

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி சூர்யாவிடம் ஒரு கதை கூறியிருப்பதாகவும் கதை பிடித்துபோக அவர் ஓகே சொல்லியிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும் இப்படத்தை டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.