நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

Suriya Next Movie  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. அஜித், விஜய்க்கு அடுத்ததாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர்.

பிரபல நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் தன்னுடைய திறமையால் சினிமாவில் உயர்ந்து நிற்பவர். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

ஒரே பாட்டில் அடித்தது யோகம்.. விஜய்யை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் யார் தெரியுமா?

மேலும் அகரம் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் மூலமாக ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இவ்விரு படங்களை தொடர்ந்து சூர்யா கிராமத்து கதையின் கிங்கான பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சிவகார்த்திகேயன் படம் இப்படித்தான் இருக்கும் – ஒப்பனாக சொன்ன பாண்டிராஜ்!

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

பாண்டிராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தின் வெற்றி காரணமாக சூர்யா பாண்டிராஜ் உடன் கூட்டணி வைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.