Suriya Next Movie : Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | NGK Movie | Kaappaan Movie | Suriya 39

Suriya Next Movie :

முதலமைச்சராக சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. முதலமைச்சர் வேடத்தில் சூர்யாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

YS ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை யாத்ரா என்ற பெயரில் படமாக இயக்கி இருந்தவர் மஹி ஆர் ராகவ்.

தளபதி 63 பிஸியில் விஜய் பார்த்து பாராட்டிய படம், பேட்டியில் நெகிழ்ந்த வில்லன் நடிகர்.!

இவர் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பாகத்தில் ராஜசேகர் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் வளர்ச்சி, அவர் முதல்வரானது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதனால் இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்க சூர்யாவை அணுகியதாக கூறப்படுகிறது. அவரும் படத்தின் கதை நன்றாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒரே நாளில் டபுள் ட்ரீட் – NGK குறித்து வெளியான அப்டேட்.!

இதனால் சூர்யாவை ஆந்திர முதலமைச்சராக பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீதான ஆவல் அதிகரித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.