புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட Suriya, இயக்குனர் யார் தெரியுமா - வெளியான அதிரடி தகவல்.!

Suriya in Navarasa Web Series : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ள சூர்யா இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் நவரசா என்ற வெப்சீரிஸ் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Soorarai Pottru Abdhul Kalam

தற்போது இந்த வெப் சீரிஸ் தொடரின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இதில் சூர்யா உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

இது குறித்த தகவலை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார்.