Suriya Jyothika Movie

நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya Jyothika Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் OTT
தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சூர்யா ஜோதிகா இணைந்து படம் நடிக்க ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா ரீ என்ட்ரி ஆக 36 வயதினிலே படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் தற்போது, இருவரும் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இறுதியாக சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க அந்தப் படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில்லு கருப்பட்டி புகழ் ஹலிதா சமீம் இவர்களுக்கு கதை எழுத உள்ளதாக அவரே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் சில்லுக்கருப்பட்டி என்ற படத்தின் 50வது நாள் வெற்றியை கொண்டாட சூர்யாவின் வீட்டிற்கு சென்றபோது நாங்கள் இரண்டு பேரும் நடிப்பதற்கு கதையை ரெடி பண்ணுங்க என்று சூர்யா தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அவர் விளையாட்டிற்காக கூறினார் என்று நினைத்துள்ளார் ஹலிதா சமீம்.

ஆனால் சூர்யா பேட்டி ஒன்றில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறோம் என்றும், கதை ரெடியாகிக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இதனால் சூர்யா-ஜோதிகா இனைந்து விரைவில் திரையரங்குகளில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உற்சாகத்துடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.