சூர்யா & ஜோதிகாவின் ரீசன்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது சரித்திர கதை அம்சம் கொண்டு உருவாகும் கங்குவா திரைப்படத்தில் பலவிதமான கெட்டப்களில் நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில்உருவாகி வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சூர்யா மற்றும் ஜோதியாக இருவரும் டென்மார்க் நாட்டில் உள்ள ஃபரோ என்ற தீவில் சுற்றுலாவுக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்தத் தீவில் உள்ள ரசிகர்களுடன் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் டென்மார்க் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு சூர்யா சென்னை திரும்பியதும் ’கங்குவா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.