நடிகர் சூர்யா சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த உள்ளார்.

Suriya Joins With Chennai Corporation : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசின் தாக்கம் உச்சத்தை தொட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

நாங்க நல்லா இருந்தால் மட்டும் போதுமா.. தன் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்காக சூர்யா எடுக்கும் அதிரடி முயற்சி.!!
வெற்றி பெற்றதும், கோலியை கட்டித்தழுவியது ஏன்? : கேன் வில்லியம்சன் பதில்

அடுத்த அலை வருவதற்குள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Silambarasan-வுடன் மீண்டும் இணைந்த Yuvan Shankar Raja | ThappuPaniten | U1 Records | AK Priyan | HD

இந்த நிலையில் நடிகர் சூர்யா உன்னுடைய தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பணி புரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வகையில் வரும் ஜூலை 6 மற்றும் 7ம் தேதி சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

சூர்யா, ஜோதிகா இருவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் உங்களை சுற்றியுள்ளவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த தடுப்பூசி முகாம் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.