ஜெய்பீம் பட கூட்டணி மீண்டும் இணையப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் இணைந்த ஜெய் பீம் கூட்டணி.. அதிரடியாக அறிவித்த பிரபலம் - வீடியோ இதோ

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா மீண்டும் ஜெய்பீம் கூட்டணி அமைத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தயாரிப்பாளர் 2 டி ராஜசேகர் நிகழ்ச்சி ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மீண்டும் இணைந்த ஜெய் பீம் கூட்டணி.. அதிரடியாக அறிவித்த பிரபலம் - வீடியோ இதோ

இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.