விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதாக செம அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Suriya in Vikram Movie : தமிழ் சினிமாவின் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் கைதி, மாஸ்டர் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.

விக்ரம் படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகர்.. தடாலடியாக செம சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் இந்த விஷயத்தை இனி காலதாமதமாக சொல்லலாம் என்றுதான் நினைத்தோம் என சொல்லி சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விக்ரம் படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகர்.. தடாலடியாக செம சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

அதாவது விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.