சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களை தயாரிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in Upcoming Movies Production Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் இந்தத் திரைப்படமும் ஜெய்பீம் என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது.

திமுகவில் விரிசலா? : அமைச்சர் கே.என்.நேரு பதில்

சூர்யாவின் அடுத்த அடுத்த படத்தை தயாரிக்கப் போகும் இரண்டு பெரிய நிறுவனங்கள் - வெளியான சூப்பர் டூப்பர் அப்டேட்.!!

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களைத் தயாரிப்பதில்லை அதிக கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இவரது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து நான்கு திரைப்படங்கள் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளது.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

இதனைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரவிக்குமார் இதற்கு முன்னதாக நேற்று இன்று நாளை படத்தை இயக்கியிருந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை இயக்கியுள்ளார்.

அதேபோல் சூர்யா அடுத்ததாக சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் இணையும் இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள்தான் தல அஜித்தின் விவேகம் மற்றும் விஸ்வாசம் படத்தை தயாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.