வாடிவாசல் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என தெரியவந்துள்ளது.

Suriya in Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். மேலும் சுதா கொங்கரா, சிறுத்தை சிவா என அடுத்தடுத்து சூர்யாவை இயக்க இயக்குனர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக நேற்று இன்று நாளை, அயலான் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படமும் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் தான் என தகவல் கிடைத்துள்ளது. இது சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.