சூரரைப் போற்று பட பாணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி ஜெய்பீம் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

ஆற்றலும் ஆக்கமும் தரும் ஆயுதபூஜை.!

சூரரைப்போற்று பட பாணியில் மீண்டுமொரு படம்.. சூர்யா ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.!!

அதுமட்டுமல்லாமல் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

எங்க அக்கா பாட்டு பாடுனா வைரல் ஆகும்..ஆன? – Sunitha-வை கலாய்த்த பாலா| Kannamma Eannamma Audio Launch

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி வாடிவாசல் திரைப்படத்திற்கு முன்னதாக சூரரைப்போற்று பட பாணியில் ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்கப்போவது யார் தயாரிக்கப்போவது யார் எந்த மாதிரியான கதை என்பது குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.