மீண்டும் சூரரைப்போற்று கூட்டணி இணைய இருப்பதை உறுதி செய்துள்ளார்.

Suriya in Sudha Kongara Direction : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம் என்ற திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி.. ஜிவி பிரகாஷ் ட்வீட்டில் உறுதிசெய்த சூர்யா
இந்தியா, உலகக் கோப்பையை வெல்லுமா?

இந்த நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக மீண்டும் சூரரைப் போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இணைந்து நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றதற்காக சோனி மியூசிக் நிறுவனம் சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்கியுள்ளது.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech | MuthalManithanAudioLaunch

இதனை சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பதிவு செய்த ஜிவி பிரகாஷ் மீண்டும் இந்த கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சூர்யா என்ன ஒரு ஆல்பம், என்ன ஒரு பயணம்.. இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் வெகு விரைவில் சூரரைப்போற்று படக்குழு மீண்டும் இணைந்து பணியாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.