John Abraham
சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் தற்போது சூரரை போற்று திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சுதா கொங்காரா இயக்க சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்காக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் இதில் நடிக்க படக்குழு ஜான் ஆப்ரகாமை அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெகுவிரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.