வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க தாமதமாகி வருவதால் சூர்யா அதற்கு முன்னதாக வேறு ஒரு படத்தில் நடித்து முடிக்க முடிவு செய்துள்ளார்.

Suriya in Siruthai Siva Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா விருதுகள் விழாவில் கிட்டத்தட்ட 7 விருதுகளை இந்த திரைப்படம் வென்றது.

மும்பை டூ சென்னை : செல்ல நாய்க்கு ரூ.2.5 லட்சத்திற்கு டிக்கெட் எடுத்த பெண்

லேட்டாகும் வெற்றிமாறன் திரைப்படம்.. சூர்யாவின் அதிரடி முடிவு.. அடுத்த படம் யாருடன் தெரியுமா??

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் வெற்றிமாறன் இன்னமும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தில் படப்பிடிப்புகளை முடிக்கவில்லை.

Thalapathy 66 Director Opens Up – Latest Update..! | Vijay | Vamshi Paidi Pally | Viral | Kollywood

இதனால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் தொடக்க கால தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக நடிகர் சூர்யா இந்த நேரத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடித்துவிடலாம் என திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.