விறகடுப்பில் பாரம்பரியமாக பொங்கல் கொண்டாடி உள்ளனர் சூர்யா மற்றும் ஜோதிகா.

Suriya in Pongal Celebration : உலகம் முழுவதும் தமிழர்கள் நேற்று தைத்திருநாள் கோலாகலமாக கொண்டாடினர். சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்களும் தங்களது வீடுகளில் குடும்பத்தோடு சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

விறகடுப்பில் பாரம்பரியமாக பொங்கல் கொண்டாடிய சூர்யா ஜோதிகா - வைரலாகும் புகைப்படம்

தைத் திருநாளான நேற்று குடும்பத்தோடு திரையுலக பிரபலங்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை பெற்று வருகிறது.

அந்த வகையில் நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து விறகு அடுப்பில் பொங்கல் வைத்து தைத் திருநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சூர்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விறகடுப்பில் பாரம்பரியமாக பொங்கல் கொண்டாடிய சூர்யா ஜோதிகா - வைரலாகும் புகைப்படம்