Suriya in Next Movie Update
Suriya in Next Movie Update

சூர்யாவின் பிறந்த நாளில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகி அது பொய் என தெரியவந்துள்ளது.

Suriya in Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஆனால் ரசிகர்களின் சூர்யாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் பிறந்தநாள் ட்ரீட்டாக சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்திலிருந்து காட்டு பயலே என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகியது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பெயரில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த பதிவில் சூர்யாவுடன் அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கமல் காதம்பரி கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஒரு வித்தியாசமும் இருக்காது.. மாஸ்டர் படம் பற்றி முக்கிய பிரபலம் கொடுத்த அதிரடி பேட்டி

ஆனால் உண்மையில் அது லோகேஷ் கனகராஜின் அதிகாரப்பூர்வ பக்கம் அல்ல. பேக் ஐடி என்பதால் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா இரும்புக்கை மாயாவி போன்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் எப்போது தொடங்கும் என்பது மட்டும் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/arun_suriyafan/status/1286159675499483136?s=19