நடிகர் சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் இல்லை எனவும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் எனத் தெரியவந்துள்ளது.

Suriya in Next Movie Director Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டடித்தன.

சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் இல்லை.. அடுத்த இயக்குனர் இவர்தான் - முழு விவரம் இதோ

இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூரிய நடிக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முடிவுக்கு வராத காரணத்தினால் சூர்யாவின் அடுத்த படத்தை பாலா இயக்கவுள்ளார்.

சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் இல்லை.. அடுத்த இயக்குனர் இவர்தான் - முழு விவரம் இதோ

இந்த படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.