Suriya in Navarasa Web Series Gettup

புதிய படத்திற்காக சூர்யா புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Suriya in Navarasa Web Series Gettup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், டிஜே கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம், மணிரத்தினம் இயக்கத்தில் நவரசா என்ற வெப் சீரிஸ், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

Suriya Movie

இந்த நிலையில் தற்போது இவர் நவரசா என்ற வெப்சீரிஸ் தொடருக்காக புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவ ரசிகர்கள் இந்த கெட்டப் செம மாஸாக இருப்பதாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த கெட்டப்பில் சூர்யா தன்னுடைய இயக்குனர் சுதா கொங்கரா மகள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.