Suriya in Navarasa Web Series

கையில் மைக்குடன் சூர்யாவின் நவரசா திரைப்பட கெட்டப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya in Navarasa Web Series : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நவரசா என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் அர்த்தத்தை படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் சூர்யா கையில் மைக் உடன் இருக்கும் நவரசா திரைப்படத்தின் கெட்டப் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

சூர்யாவின் கெட்டப் மட்டுமல்லாமல் அரவிந்த் சாமி, சித்தார்த், விஜய் சேதுபதி ஆகியோரின் கெட்டப்புகளும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

9 கதை 9 எமோஷன் என இந்த நவரசா திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.