Suriya in Historical Movie

சரித்திர கதையில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in Historical Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நவரசா என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது சரித்திர கதை ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் வெயில், காவியத்தலைவன், அங்காடித்தெரு, அரவான் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் சூர்யாவை சந்தித்து சரித்திர கதை ஒன்றை கூறியுள்ளார். சூர்யாவுக்கும் இந்த கதை பிடித்து போக அவர் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.