சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in GangLeader Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படத்தை தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா அடுத்ததாக யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் அதிகமான ஹிட் படங்களை கொடுத்த விக்ரம் குமார் நானியை வைத்து இயக்கியிருந்த கேங் லீடர் என்ற படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தமிழில் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதில் முதல் வேலையாக சூர்யாவை வைத்து தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.