Suriya in Birthday Count Start
Suriya in Birthday Count Start

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் தற்போது தொடங்கியுள்ளனர்.

Suriya in Birthday Count Start : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பால் நடிப்பின் நாயகன்/ அரக்கன் என பெயர் பெற்றுள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காகத் தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே நல்ல ஒரு வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வரும் சூர்யாவிற்கு சூரரைப்போற்று சூர்யாவின் நடிப்பை போற்றும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கறிஞரான சூர்யாவின் ரீல் மகள்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்!

இது ஒருபுறமிருக்க அடுத்த மாதம் அதாவது ஜூலை 23 ஆம் தேதி சூர்யா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதற்காக ரசிகர்கள் தற்போதே என்னென்ன செய்யலாம்? எப்படிக் கொண்டாடலாம் என திட்டமிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஹலோ என்ற சமூக வலைதளப் பக்கத்தில் #SuriyaHBDCountDown என்ற டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படமும் ஹரி இயக்கத்தில் அருவா என்ற திரைப்படமும் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.