சூப்பர் ஹிட் இயக்குனருடன் மூன்றாவது முறையாக நடிகர் சூர்யா கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in Bala Direction : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கோவை-சேலம் மேட்ச் ரத்து : தலா ஒரு புள்ளி பகிர்வு..ஏனென்றால்

சூப்பர் ஹிட் இயக்குனருடன் 3வது முறையாக கூட்டணி அமைக்கும் சூர்யா - ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அவர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான பிதாமகன், நந்தா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய Rajinikanth-க்கு மகள் கொடுத்த Surprise – மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!