Suriya in 5 Upcoming Movies
Suriya in 5 Upcoming Movies

நடிகர் சூர்யாவின் அடுத்த 5 திரைப்படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Suriya in 5 Upcoming Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. அஜித், விஜய் ஆகியோர் வளர்ந்து வரும் நடிகர்கள் ஆக இருந்த காலத்தில் முன்னணி நடிகராக கோலோச்சியவர் சூர்யா.

ஆனால் சமீபகாலமாக நல்ல கதையை தேர்ந்தெடுக்க முடியாமல் தவித்து வருகிறார். சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூலில் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை.

ஆனால் இனி அவரது நடிப்பில் வெளியாகவுள்ள 5 திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வாய்ப்புள்ளது. காரணம் சூர்யா தேர்ந்தெடுத்துள்ள இயக்குனர்கள் அப்படி.

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயற்றியுள்ளார்.

இறுதிச்சுற்று என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் என்பதால் இப்படமும் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க உள்ளார். எப்போதுமே ஹரி, சூர்யா கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவே அமைந்துள்ளது. மேலும் இதுவும் கிராமத்து கதை என்பதால் நிச்சயம் வெற்றி பெறும்.

எப்பா என்ன இது?? டைட்டான உடையில் செம கவர்ச்சி ஆட்டம் போட்ட ஆர்யாவின் மனைவி சாயிஷா – மிஸ் பண்ணாமல் பார்க்கும் ரசிகர்கள்!

அதன் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் படம் என்பதால் தரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் நடிக்க உள்ளார். கிராமத்து கதைகளின் கிங் பாண்டிராஜ் என்பதால் இந்த படமும் சூர்யாவுக்கு சிறந்த வெற்றியை தரும் என நம்பலாம்.

இந்த நான்கு படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற படத்தில் நடிக்க உள்ளார். லோகேஷ் இந்த படத்தின் கதையை கைதி படத்தை இயக்கும் போது சூர்யாவிற்கு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சூர்யாவின் அடுத்த 5 திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய படங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவைகளில் நீங்க எந்த கூட்டணிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.