Suriya Heroine in Bala Direction Movie

சூர்யாவுக்கு ஜோடியாக 70-களில் பாலிவுட் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya Heroine in Bala Direction Movie : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைந்ததாக நேற்று இயக்குனர் பாண்டிராஜ் அறிவித்தார்.

நம்பினோர் கெடுவதில்லை.! (சிறுகதை)

அடுத்ததாக பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா. அதே சமயத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிக்க உள்ளார். பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் pre-production பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல் | Annaatthe

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த ஹேமமாலினியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் 1970-ல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்தப் படத்தில் வயதான சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி சூர்யா ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சூர்யாவை விட வயதில் பல மடங்கு மூத்த நடிகை சூர்யாவுக்கு ஜோடியாக என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.