Prasanna
பிரபல நடிகரான பிரசன்னா முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. இவர் வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தீயாக பரவின. ஆனால் அது உண்மையில்லை என பிரசன்னா விளக்கம் கொடுத்து இருந்தார்.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் ஹரி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.