சூர்யா ஹரி கூட்டணியில் பிரபல நடிகை நாயகியாக இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சுதா கொங்காராவ் இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் ஹரி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ஹரி படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பு சன் நியூஸ் தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது.
தமிழில் பேட்ட படத்தில் நடித்ததை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்தாததாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருப்பதால் ரசிகர்கள் குடுத்து வச்ச லேடி மா நீ என வாழ்த்துக்கலை கூறி வருகின்றனர்.
இயக்குநர் ஹரி இயக்கும் சூர்யாவின் அடுத்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் இணைகிறார்@Suriya_offl#SunNewsSocial #SunNews #Hari #Surya #MalavikaMohanan #Kollywood pic.twitter.com/TulQfRF91H
— Sun News (@sunnewstamil) January 28, 2020