தன்னுடன் நடித்த பிரியங்கா மோகனுக்கு சூர்யா சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

Suriya Gift to ET Heroine : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

தன்னுடன் நடித்த பிரியங்கா மோகனுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் - வைரலாகும் போட்டோ.!!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலிலும் இந்த படம் கலக்கி வருகிறது. இதனால் நடிகர் சூர்யா தன்னுடன் இணைந்து நடித்த பிரியங்கா மோகன் அவர்களுக்கு கிப்ட் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சூர்யா அனுப்பி வைத்த கிப்ட்டின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிரியங்கா மோகன் சூர்யாவிற்கு நன்றி கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடன் நடித்த பிரியங்கா மோகனுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் - வைரலாகும் போட்டோ.!!