என் பொண்டாட்டிய புடிச்சி இருக்குன்னு சொன்னியாமே என சின்னஞ்சிறு நடிகரை மிரட்டி உள்ளார் நடிகர் சூர்யா.

Suriya Fun With Ratchasi Actor : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இதர நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை மொத்தமாக நிறுத்திக்கொண்ட ஜோதிகா தற்போது மீண்டும் சோலோ நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

என் பொண்டாட்டிய புடிச்சி இருக்குன்னு சொன்னீயாமே.. சின்னஞ்சிறு நடிகனை மிரட்டிய சூர்யா - அந்த பையன் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ராட்சசி. இந்த படத்தில் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி யில் பாடகனாக பங்கேற்ற சிறுவன் ஒருவன் நடித்திருப்பார். அவன் ஒரு காட்சியில் ஜோதிகாவை பார்த்து உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் என ப்ரொபோஸ் செய்வார்.

இதனை அடுத்து சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் அந்த சிறுவனைப் பார்த்து நீ என் பொண்டாட்டிய புடிச்சிருக்குது சொன்னியாமே. தினமும் நைட்டு உன்னை பத்திதான் பேசுறா என மிரட்டல் தொனியில் விளையாட்டாக கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் ஆமா அப்படி சொல்ல சொன்னாங்க சொன்னேன் என பதில் கூறியுள்ளார்.